பேருந்து ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதம்..அறிவுரை கூறி அனுப்பிய போலீசார்..!

சென்னை அருகே குன்றத்தூரில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தை இயக்கிய டிரைவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

குமரன்சாவடி அருகே பள்ளி மாணவர்களை டிரைவர் அடித்ததாக கூறப்படுகிறது. அங்கு பணியில் இருந்த போக்குவரத்து ஆய்வாளர் ஜெயக்குமார் அரசு பேருந்து சாலையோரமாக நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களை அழைத்து அறிவுரை கூறினார்.

 

பேருந்தில் பயணம் செய்த பொழுது தவறு யாருமேல் இருந்தாலும் அது டிரைவரை தான் பாதிக்கும் எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.