கடந்த மே மாதம் 15 ம் தேதி திருப்பூர் மாநகரம், வடக்கு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வலம்பாலம், கார்த்திக் கார்டன் அருகில் உள்ள செல்வ கணபதி வே-பிரிட்ஜில் சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுக்கா, தொப்பக்காடு கிராமத்தை சேர்ந்த செங்கோட்டையன் என்பவரின் மகன் ஏழுமலை( 39).
இவர் பழைய இரும்புகளை திருடிகொண்டிருந்தபோது அந்த வே-பிரிட்ஜில் வேலை செய்யும் வெங்கமேடு பகுதியை சேர்ந்த கிரிஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் பாண்டி (45) என்பவர் தடுக்க முயன்றபோது அவரை கல்லால் தாக்கி காயப்படுத்தினார். இது தொடர்பாக வடக்கு காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
குற்றவாளி தொடர்ந்து பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி ஆணையிட்டுள்ளார்.
கோயமுத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளவரை 1 ஆண்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நேற்று ஆணை வழங்கப்பட்டது. திருப்பூர் மாநகரத்தில் பொது அமைதிக்கும் பொதுமக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 60 நபர்கள் 2024-ம் ஆண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.