திருப்பூர், பி.என்.ரோடு, திருமலை நகர், ஸ்ரீ சரஸ்வதிகிரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் கே வி கிரி மெமோரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அவரது 100வது நினைவு தினத்தையொட்டி திருப்பூர் வடக்கு மண்டல அளவில் உள்ள அரசு, மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி சிறுபூலுவப்பட்டி, தாய் மூகாம்பிகை நகர், ஸ்ரீ சரஸ்வதிகிரி கார்டன் விளையாட்டு மைதானத்தில் 2 நாட்கள் நடந்தது.
போட்டியை ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜெயா மோகன் தொடக்கி வைத்தார். கைப்பந்து போட்டியில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவி அணிகள் கலந்து கொண்டனர்.
மாணவர்களுக்கான இறுதி போட்டியில் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், பாண்டியன் நகர், சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும், சோளிபாளையம் லிட்டில் கிங்டம் சீனியர் செகண்டரி ஸ்கூல் மூன்றாம் இடத்தையும், விகாஸ் வித்யாலயா பள்ளி நான்காம் இடத்தையும் பிடித்தன.
அதேபோல் மாணவிகளுக்கான இறுதி போட்டியில் நெருப்பெரிச்சல், திருமுருகன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், விகாஸ் வித்யாலயா ஜூனியர் மெட்ரிக் பள்ளி இரண்டாம் இடத்தையும், சோளிபாளையம் லிட்டில் கிங்டம் சீனியர் செகண்டரி ஸ்கூல் மூன்றாம் இடத்தையும், ஸ்ரீ சரஸ்வதி கிரி பள்ளி நான்காம் இடத்தையும் பிடித்தன.
இதனைத்தொடர்ந்து மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவுக்கு பள்ளி நிர்வாக அதிகாரி பிரபாவதி தலைமை தாங்கினார். விழாவில் 15 வேலம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, திருப்பூர் மாநகராட்சி 25 வது வார்டு கவுன்சிலர் தங்கராஜ் ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு கேடயம், பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கினார். முடிவில் பள்ளி முதல்வர் முதல்வர் கலைச்செல்வி நன்றி கூறினார்.