மனைவியை கொன்று விட்டு வீட்டின் முன் கத்தியுடன் அமர்ந்த கணவன்..!
ஆந்திர மாநிலத்தில் வெட்டி கொலை செய்யப்பட்ட மனைவியின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் நிலையில் கணவன் கத்தியுடன் வீட்டின் முன்பு அசால்டாக அமர்ந்திருக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ராமானுஜ புரத்தைச் சேர்ந்த சூரிய சந்திரன் என்பவருக்கும் அவரது மனைவி லக்ஷ்மிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
லட்சுமியை வீட்டின் முன்பு இழுத்துப் போட்டு கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் சூரிய சந்திராவை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





