--- --:--:-- --

சிக்னலில் நின்ற கார்கள்.. வந்து அதிவேகமாக மோதிய பேருந்து..!

3

சென்னை கிண்டியிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று மீனம்பாக்கத்தில் சிக்னலில் நின்று கொண்டிருந்த கால் டாக்ஸியின் பின்னால் மோதியதில் அந்த கார் இடித்ததில் முன்னால் நின்றிருந்த கார்கள் ஒன்றன்பின் ஒன்று மோதிக்கொண்டன.

 

சிக்னல் விழுந்ததை பேருந்து ஓட்டுநர் கவனிக்காததால் விபத்து ஏற்பட்டதாக கால் டாக்ஸி ஓட்டுநர்கள் குற்றம் சாட்டிய நிலையில் பிரேக் பிடிக்காததால் விபத்து ஏற்பட்டதாக பேருந்து ஓட்டுனர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 6 கால் டாக்ஸிகள் சேதமடைந்த நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon