--- --:--:-- --

கேரளாவுக்கு புறப்பட்ட ராணுவம் மற்றும் கடலோர காவல் படை ஹெலிகாப்டர்கள்..!

3

கேரள நிலச்சரிவு பகுதிக்கு கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மற்றும் மோப்ப நாய்களுக்கு குழு விரைந்துள்ளது. 300 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

 

கூடுதலாக தேவை என்றாலும் அனுப்பி வைக்கப்படும் என தனது எக்ஸ் பதிவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார். திருவனந்தபுரம், பெங்களூரு, டெல்லி ஆகிய பகுதிகளில் இருந்து மீட்பு குழு விரைந்து இருப்பதாக கூறியுள்ளார்.

 

ராணுவ தலைமை தளபதி குபேந்திரன் பேசியதாக பதிவிட்டுள்ளார். ரப்பர் படகு, பாதுகாப்பு உடை, டீசல் இன்ஜின்கள், மலை கோட்டுகள் ஆகியவற்றை அனுப்பி உள்ளதாக கூறியுள்ள கடலோர காவல் படை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

 

இதனிடையே 690 அடி நீளம் உள்ள பாலத்தை அந்த பகுதிக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் ஏற்கனவே சாலை மார்க்கமாக 330 அடி நீளம் பாலம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon