--- --:--:-- --

காவிரியில் தண்ணீர் தராத கர்நாடக அரசை கண்டித்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்..!

5

காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா முதலமைச்சர் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று காத்த காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

 

காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவின்படி ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு மொத்தம் 40 tmc நீரை திறக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி செல்வ பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

தமிழகத்திற்கு மூன்று டிஎம்சி தண்ணீர் நிலுவையில் உள்ளதாக குறிப்பிட்டவர் ஜூலை மாதம் நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவை உதாசீனப்படுத்திய வகையில் கர்நாடக அரசு கூறி இருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறினார்.

 

கர்நாடக அரசு நடவடிக்கை குறித்து மத்திய அரசு மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறிய செல்வப் பெருந்தகை உடனடியாக மோடி அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon