புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் கைது..3 படகுகள் பறிமுதல்..!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 13 பேரையும் அவர் 23ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்ட துறைமுகத்திலிருந்து மீனவர்கள் ஆழ் கடலுக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது இலங்கை நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பொழுது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களின் மூன்று விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் மீனவர்கள் 13 பேரும் யாழ்ப்பாணம் ஊர் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்களை வரும் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





