தண்ணீர் தொட்டியில் இறந்து மிதந்த குடும்பம்..!
கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் நெசவாளர் காலனி எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் ஒர்க்ஷாப் பெயிண்டிங் என கிடைக்கின்ற வேலையை செய்து வந்துள்ளார்.
தங்கராஜிற்கு புஷ்பா என்ற மனைவியும் ஹரிணி மற்றும் சிவானி என்கிற இரண்டு மகன்களும் உள்ளனர். திங்கள்கிழமையன்று காலையில் அக்கம் பக்கத்தினரிடம் தனது மனைவி மகள்கள் தண்ணீர் தொட்டியில் கிடக்கிறார்கள். மீட்டு உதவி செய்யுமாறு தங்கராஜ் கூறியுள்ளார்.
இது நான் அதிர்ச்சியடைந்த அக்கப் பக்கத்தில் மூன்று பேரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் மூவரும் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளன. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக தங்கராஜ் வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்துவிட்டு மனைவியோடு தகராறு செய்து வந்துள்ளார். மேலும் குளிப்பதற்கு தங்கராஜ் பணம் கேட்ட பொழுது புஷ்பா பணம் தர மறுத்துள்ளார்.
தங்கராஜ் மூத்த மகள் ஹரிணியை வீட்டின் தண்ணீர் தொட்டிக்குள் தள்ளிவிட்டுள்ளார். ஹரிணியை மீட்பதற்கு புஷ்பா தண்ணீர் தொட்டிக்குள் குதித்த நிலையில் தங்கராஜ் இளைய மகளான சிவானியையும் தொட்டிக்குள் வீசி தொட்டியை மூடியுள்ளார்.
இதனை போலீஸிடம் தங்கராஜை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் தங்கராஜை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவி மற்றும் மகள்களை கொன்ற சம்பவம் இந்த பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





