--- --:--:-- --

வந்தது புது மெஷின்..பணம் போட்டால் குண்டு வரும்..!

2

டிஎம் இந்திரத்தில் பணத்தை மட்டும் எடுப்பதையே நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் துப்பாக்கி குண்டுகளைப் பெற தனித்த இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

 

துப்பாக்கி வைத்திருப்பவர்கள் எளிதாக குண்டுகளை பெறும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சோதனை முயற்சியில் அனுபமா, டெக்சாஸ் ஆகிய மாகாணங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

 

துப்பாக்கி வைத்தவர்கள் அடையாள அட்டையை காண்பித்து உரிய பணத்தை செலுத்தி தேவையான கூண்டுகளை பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் துப்பாக்கி குண்டுகளை பெற குறிப்பிட்ட எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்படாதது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

 

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகப்படியாக நடக்கும் இடத்தில் இது போன்ற முயற்சி அதனை கட்டுப்படுத்த உதவுமா? அல்லது சட்ட ஒழுங்கு பிரச்சனையை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon