--- --:--:-- --

திருவள்ளூரில் பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பாஜக நிர்வாகி..!

3

திருவள்ளூரில் இரண்டு ஆண்டுகளாக பூட்டிய வீடுகளில் கொள்ளை அடித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்த பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையை சேர்ந்தவர் பிரபாகரன்.

 

மேற்கு மாவட்ட பாஜக இளைஞரணி துணைத் தலைவரான இவர் சுற்று வட்டார பகுதியில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு இரவில் புகுந்து நகை பணம் திருடியுள்ளார். மேலும் அவற்றை விற்பனை செய்து ஒரு கோடி ரூபாய் அளவில் கிராமத்தில் சொகுசு வீடு கட்டியுள்ளார்.

 

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். 51 லட்சம் ரூபாய் மதிப்பிலான 84 சவரன் உருக்கிய தங்க கட்டிகளையும் ஊத்துக்கோட்டை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon