--- --:--:-- --

கோதாவரி ஆற்றில் மூழ்கிய பெண்ணை நொடிப் பொழுதில் காப்பாற்றிய மீனவர்..!

2

ந்திராவின் கோதாவரி ஆற்றில் மூழ்கிய பெண்ணை மீனவர் ஒருவர் துரிதமாக மீட்ட காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. ராஜமுந்திரி அருகே கோதாவரி ரயில்வே பாலத்திலிருந்து 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்ததாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

 

உடனடியாக மீனவர்களுடன் சம்பவ இடத்திற்கு வருகின்ற காவல் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது மீனவர் ஒருவர் ஆற்றில் குதித்து தண்ணீரில் தத்தளித்து கொண்டிருந்த பெண்ணை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

 

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திரைப்பட பாணியில் நடந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon