கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த கோர விபத்து..!
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தின் கோர காட்சிகள் வெளியாகியுள்ளன. ஐஸ்வர்யம் நகரை சேர்ந்த கீர்த்திவாசன் என்பவர் மறைமலை நகர் பாவேந்தர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மின்னல் வேகத்தில் வந்த லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கீர்த்தி வாசன் மீது பின்னால் வந்த லாரியின் டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில் விபத்தின் கோர காட்சிகள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





