சில்லறை இல்லாததால் கர்ப்பிணியை நடுரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனர்..!
பாபநாசம் அருகே சில்லறை இல்லை எனக் கூறி கர்ப்பிணி பெண்ணை நடுரோட்டில் இறக்கிவிட்ட நடத்துனரின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. தஞ்சாவூரில் இருந்து ராஜகிரி செல்வதற்காக தனியார் பேருந்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் ஏறி உள்ளார்.
500 ரூபாய் கொடுத்து டிக்கெட் கேட்ட கர்ப்பிணி பெண்ணை சில்லறை இல்லை எனக்கூறி கண்டக்டர் பாதி வழியில் இறக்கிவிட்டுள்ளார். பசுபதி கோவில் என்ற இடத்தில் இறக்கிவிடப்பட்ட அவர் வேறொரு பஸ்ஸில் ஏறிச் சென்றுள்ளார்.
கர்ப்பிணியை பாதி வடிவில் இறக்கி விட்ட கண்டக்டரை மற்றொரு பெண் சரமாரியாக கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





