கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் 57 ஆக உயர்வு..!
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 202-ஆக உயர்ந்துள்ள நிலையில், இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாரயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளிலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை உயிரிழப்பு எண்ணிக்கை 57-ஆக உயர்ந்துள்ள நிலையில், மேலும் சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது. கள்ளச்சாராயம் விற்றதாக கைது செய்யப்பட்ட சின்னதுரை, ராமர் மற்றும் ஜோசப் ராஜா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட சுப்பிரமணி, உரிய சிகிச்சை பெறாமல் வீட்டுக்கு தப்பிச் சென்ற நிலையில், மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரு மகள்கள், ஒரு மகன் உள்ள நிலையில் சுப்பிரமணியின் குடும்பம் இன்று நிர்கதியாக நிற்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




