சென்னையில் தாய், தம்பியை கொன்ற மூத்த மகன்..!
சென்னையில் தாய், தம்பியை கொலை செய்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி கல்லூரியில் படித்துவந்த நித்தேஷ், அதிக அரியர்ஸ் வைத்திருந்ததாகத் தெரிகிறது.
இதனை தாயார் பத்மா அடிக்கடி கண்டித்ததால் ஆத்திரமடைந்த நித்தேஷ், தாயும், தம்பி சஞ்சையும் தூங்கிக் கொண்டிருந்தபோது கத்தியால் குத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




