சர்வதேச யோகா தினம் யோகாசனம் செய்த பிரதமர் மோடி..!
சர்வதேச யோகா தினத்தை ஒட்டி ஸ்ரீ நகரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார். சர்வதேச யோகா தினத்தையொட்டி ஸ்ரீ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு யோகாசனம் செய்தார்.
சர்வதேச யோகா தினத்தையொட்டி காஷ்மீர் தலைநகரில் உள்ள ஏரிக்கரையில் உள்ள அரங்கில் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று யோகாசனம் செய்தார். அப்பொழுது அவருடன் சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி சர்வதேச யோகா தினத்தை அறிமுகம் செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கும் நிலையில் யோகாசனம் மீதான உலகத்தின் பார்வையே மாறியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
மக்கள் யோகாவை தங்களது வாழ்வின் ஒரு அங்கமாக மாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர் யோகாவால் நாட்டை சுற்றுலாத் துறை வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்டார். இதன் மூலம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு நாட்டில் அதிகரித்துள்ளதாகவும் பிரதமர் மோடி தனது பேச்சில் சுட்டிக் காட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





