--- --:--:-- --

விஷ சாராயம்..குற்றவாளியை தப்ப வைக்க முயற்சியா? -ராமதாஸ்

5

கள்ளக்குறிச்சியில் சாராய விவகாரம் குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணை தேவை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தொடர்புடைய குற்றவாளி தப்பிக்கவே முயற்சிகள் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

 

குற்றவாளிகளை காப்பாற்ற அரசு சதி செய்வது கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார் ராமதாஸ். விஷ சாராய சாம்பிள் குறித்த அனைத்து உரிமைகளும் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

 

சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள், எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், விஷ சாராய மரணங்கள் குறித்த விசாரணையை சிபிஐ தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon