திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்..!
திருப்பதியில் இலவச தரிசனத்துக்கு 36 மணிநேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினசரி பல்வேறு மாநிலம், மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு பக்தர்களின் புது வரவும் நாளுக்கு நாள் அதிகமாக காணப்படும்.
அந்த வகையில் வார இறுதிநாள் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.இதனால் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள் 36 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தில் உள்ள 32 அறைகளும் நிரம்பிவிட்ட நிலையில் பக்தர்கள் சுமார் ஆறு கிலோமீட்டர் நீள வரிசையில் காத்திருக்கின்றனர்.இதேபோல 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் 4 மணி நேரத்திற்கு பின்பே ஏழுமையான தரிசிக்கும் நிலை உள்ளது.காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




