இளைஞரை கொலை செய்து எரித்து புதைத்த நண்பர்கள்..!
கும்பகோணம் அருகே இளைஞரை நண்பர்களே கொலை செய்து உடலை எரித்து புதைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சோழபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல்.
இவர் கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள மருந்து கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12ஆம் தேதி இரவு நேர பணிக்கு சென்று கோகுல் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினார். எந்த தகவலும் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்திய பொழுது கோகுலை அவரது நண்பர்கள் இரண்டு பேர் கொலை செய்து புதைத்தது தெரிய வந்தது. கோகுல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





