--- --:--:-- --

புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி மீண்டும் தொடக்கம்..!

10

தமிழகம் முழுவதும் புதிதாக இரண்டு லட்சம் ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் புதிய ரேஷன் அட்டை கேட்டு 2 லட்சத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக புதிய குடும்ப அட்டை பெற முடியாமலும் திருத்தம் செய்ய முடியாமலும் ஏற்பட்டது.

 

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்த நிலையில் இரண்டு லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாக தமிழக உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon