தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகை..தேதி அறிவித்த தலைமை காஜி..!
தமிழ்நாட்டில் வரும் 17ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இறைதூதர் இப்ராகிமின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழா, ‘ஈத்உல்-அதா’ என்றும் தியாகத் திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
பக்ரீத் பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. பக்ரீத் நாளில் சிறப்பு தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமியர்கள், அசைவ உணவுகளை சமைத்து பலருக்கும் பகிர்ந்து அளிப்பது வழக்கம்.
இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் நேற்று பிறை தென்பட்டதை அடுத்து வரும் ஜூன் 17ம் தேதி பக்ரீத் கொண்டாடப்படும் என்றும் தமிழ்நாடு அரசின் தலைமை காஜி, சலாவுதீன் முகமது அயூப் தெரிவித்துள்ளார்.அன்றைய தினத்தில் இஸ்லாமியர்கள் அனைவரும் குர்பானி கொடுத்தும், தொழுகையில் ஈடுபட்டும், ஒற்றுமையுடன் இணைந்து வாழ இறைவனிடம் பிரார்த்தனை செய்வர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




