அழுகிய நிலையில் தாய், மகன்களின் சடலம்..பக்கத்து அறையில் கணவர் உயிருக்கு போராட்டம்..!
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் அடுத்த பகுதியில் சிவன் என்பவரது மனைவி நந்தினி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளின் அழுகிய சடலங்கள் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் அதே வீட்டில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தம்பதியிடையே அடிக்கடி பிரச்சினை எழுந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் பேசுவதில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் காலை சிவன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே பக்கத்து வீட்டு ஜன்னல் வழியாக உள்ளே பார்த்துள்ளனர். அப்பொழுது நந்தினியும் இரண்டு குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர்.
தகவல் அறிந்து போலீசார் சென்ற பொழுது சடலம் அருகே உணவு மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்கள் கிடந்துள்ளன. மற்றொரு அறையில் சிவன் உயிருக்கு போராடிய நிலையில் மனைவி குழந்தைகளுக்கு விஷம் வைத்து கொன்றுவிட்டு தான் மாட்டிக் கொள்வோம் என்பதால் சிவன் தாமும் விஷம் அருந்தினார் என்பது அவர் உயிர் பிழைத்தால் மட்டுமே தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





