இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார் ஸ்டாலின்..!
டெல்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேர்தலுக்குப் பிறந்த வியூகங்களை வகுப்பதில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அதன்படி நாளை ஏழாம் கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்த பிறகு டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்.
அதில் டெல்லி முதலமைச்சர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்பார் என முதலில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் அவர் பங்கேற்க மாட்டார் என திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





