குழந்தைகள் நல மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து..!
டெல்லியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில் 7 பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. டெல்லி விவேக் விஹார் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் நல மருத்துமனையில் நேற்று நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை ஊழியர்கள் குழந்தைகளை அவசரம் அவசரமாக வெளியேற்றினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் இருந்து மீட்கப்பட்ட 12 குழந்தைகளில் 7 பச்சிளங் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
காயமடைந்த குழந்தைகள் மற்றொரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




