கடந்த மாதமும் பருப்பு இல்லை..இந்த மாதமும் பருப்பு இல்லை.. புலம்பும் மக்கள்..!
மயிலாடுதுறை அருகே நியாயவிலை கடைகளில் பருப்பு வகைகள் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 432 நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன.
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி முதல் 10ஆம் தேதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பருப்பு, பாமாயில், சர்க்கரை, கோதுமை மற்றும் அரிசு ஆகிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்பொழுது மாவட்டத்தில் உள்ள பல்வேறு நியாய விலை கடைகளில் பருப்பு இருப்பு இல்லை என கூறப்படுகிறது. அடுத்த மாதம் வாங்குமாறும் கடந்த மாதமும் நியாய விலை கடை ஊழியர்கள் கூறியதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





