மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்..!

திருச்செந்தூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்து கழுத்தை நெரித்து கொலை செய்த கணவனை காவலர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள மேல் ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த ஜெயக்குமார் – பொன்மாரி தம்பதிக்கு உஷா தேவி, உமாதேவி என்ற இரண்டு மகள்களும் தீனா. மாடசாமி என்ற மகனும் உள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் நான்கு நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்ததாக தெரிகிறது. அதனால் கணவன் – மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு தகராறு ஏற்பட்ட பொழுது ஆத்திரமடைந்த ஜெயக்குமார் மனைவியை தாக்கி கழுத்தை நெரித்துள்ளார்.

 

இதில் பொன்மாரி மயங்கி விழுந்ததும் ஜெயக்குமார் அங்கிருந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. பொன்மாரி வாயில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அவரது தம்பி பொன்சங்கர் ஆத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

 

காவலர்கள் பொன்மாரியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கணவர் ஜெயக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.