--- --:--:-- --

சென்னையில் மீண்டும் கொடூரம்.. நாய் கடித்து ஒருவர் படுகாயம்..!

2

சென்னையில் மீண்டும் நாய் கடித்ததில் ஒருவர் படுகாயம் அடைந்திருக்கிறார். மதுரவாயலுக்கு அருகே உள்ள ஆளப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த லாவண்யா என்பவர் வளர்த்த நாய் ஒன்று அந்த பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் என்பவரை கடித்துள்ளது.

 

இதில் பலத்த காயமடைந்தவர் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் நாயின் உரிமையாளர் லாவண்யா மீது நடவடிக்கை எடுக்க கோரி ரமேஷ் குமாரின் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon