குடும்பத்துடன் டூர்.. கட்டுப்பாட்டை இழந்த கார்.. தூக்கி வீசப்பட்ட உடல்கள்..!
கடலூர் மாவட்டம் ராவணத்தம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டு இறந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த உறவினர்கள் எட்டு பேருடன் புதுச்சேரிக்கு சுற்றுலா சென்ற பொழுது அவர்கள் பயணித்த கார் நேற்று இரவு கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் காரில் பயணித்த இந்துமதி, ரேகாவின் 13 வயது மகள் நந்தனா ஆகியோர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கார் ஓட்டுநர் பிரவீன் குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





