4ம் கட்ட நாடாளுமன்ற தேர்தல்..இன்று மாலையுடன் தேர்தல் பரப்புரை ஓய்ந்தது!
மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்டங்களுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் 4ஆவது கட்ட வாக்குப்பதிவு செவ்வாய்கிழமை நடைபெற இருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து ஆந்திர பிரதேசத்தில் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், ஒடிசாவின் முதல் கட்டமாக 28 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
மேலும் மக்களவை தொகுதிகளுக்காக ஆந்திர மாநிலத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகள், தெலங்கானாவில் 17 நாடாளுமன்றத் தொகுதிகள், பிகாரில் 5, ஜார்க்கண்ட்டில் 4, மத்தியபிரதேசத்தில் 8 தொகுதிகளும் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவை சந்திக்க உள்ளன.
மேலும் மகாராஷ்டிராவில் 11, ஒடிசாவில் 4, உத்தரபிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்குவங்கத்தில் 8, ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகள் நாடாளுமன்றத் தேர்தலின் 4 ஆம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ள உள்ளன. இந்நிலையில் 96 தொகுதிகளிலும் மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவடைந்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




