--- --:--:-- --

ஓடும் பைக்கில் தீக்குளித்த காதல் ஜோடி..!

10

யிலாடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காதல் ஜோடி தீக்குளித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. பலத்த தீக்காயம் அடைந்த காதல் ஜோடிக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மயிலாடுதுறையை சேர்ந்த ஆகாஷ் என்ற கல்லூரி மாணவரும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் பழக்கம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் ஆகாஷ் வேறு பெண்ணிடம் பழகியதால் காதல் ஜோடிக்கு இடையே பிரச்சனை நிலவியதாக கூறப்படுகிறது.

 

அப்போது ஆகாஷ் காதலி திடீரென ஓடும் இருசக்கர வாகனத்திலேயே பெட்ரோலை ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்காயம் அடைந்து இருவருக்கும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

 

வாக்குமூலம் பெற்றதை எடுத்து இருவரும் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon