பரப்புரைக்கு சென்ற பிரியங்கா காந்திக்கு ஆதரவாக மக்கள் முழக்கம்..!
மக்களவைத் தேர்தல் பரப்புரையில் செல்போன் வெளிச்சத்தில் மைக் இல்லாமல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உரையாற்றிய காட்சி கவனம் பெற்றுள்ளது.
மின்சார வெளிச்சம் இல்லாத பகுதியில் கூடி இருந்த ஆயிரக்கணக்கானோர் நடுவே உரையாற்றினார். காரின் மீது ஏறி நின்று பேசியவருக்கு அங்கு கூடியிருந்தவர்கள் பிரியங்கா காந்திக்கு ஆதரவாக முழக்கமிட்டு ஆர்ப்பரித்தனர்.
மேடையோ மைக்கோ இல்லாமல் காரில் ஏறி நின்று பேசியதும் மின் விளக்கும் இல்லாத நிலையில், செல்போன் விளக்குகளை ஒளிரச்செய்து மக்கள் ஆதரவு அளித்த காட்சியும் பேசு பொருளாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




