12ம் வகுப்பு தேர்வில் சிறை கைதிகள் படைத்த சாதனை..!
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 91.43 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். பள்ளி மாணவர்களை போன்று சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் கல்விப் பயலும் வகையில் சிறைக்குள் பாட புத்தகங்கள் வழங்கப்பட்டு கல்வி ஆர்வலர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தனித்தேர்வர்களாக பொது தேர்வுகளை எழுத சிறைச்சாலைகளுக்குள் பிரத்தியேக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு சிறைவாசிகள் தேர்வு எழுதி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு புழல் சிறையில் உள்ள 35 பேர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
இதில் இரண்டு பெண் கைதிகள் உட்பட 32 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைச்சாலையில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற கைதிகளுக்கு அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





