கணவனுடன் தகராறு..வாய் பேச முடியாத மகனை முதலைக்கு இரையாக கொடுத்த தாய்..!
கணவனுடன் ஏற்பட்ட சண்டை காரணமாக 6 வயது ஊனமுற்ற மகனை தாயே தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது. கர்நாடகாவில் உத்தரகனடாவைச் சேர்ந்த குமார்- சாவித்திரி தம்பதி அவர்களுக்கு ஆறு வயதில் ஒரு ஊனமுற்ற மகன் இருந்துள்ளார்.
இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று மீண்டும் இருவரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மனைவி தனது ஊனமுற்ற ஆறு வயது மகனை முதலையிடம் தள்ளிவிட்டு கொடூர கொலை செய்துள்ளார்.
முதலையிடம் கடிபட்டு சிறுவன் கொடூரமாக உயிரிழந்தான். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாய் சாவித்திரி மற்றும் அவர்களின் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





