--- --:--:-- --

ஜெயக்குமாரின் வயிற்றின் மேல்பகுதியில் இரும்பு தகடு..!

1

மர்மமான முறையில் உயிரிழந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் வயிற்றின் மேல்பகுதியில் ஒரு இரும்பு தகடு இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

 

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி. ஜெயக்குமார் தனசிங், காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடல் தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் ஜெயக்குமாரின் உடல் கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

 

பிரேதப் பரிசோதனை முழுவதும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், ஜெயக்குமாரின் உடல், அவரது மகன் கருத்தையா ஜெஃப்ரினிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸில் அவரது சொந்த ஊரான திசையன்விளை அருகே உள்ள கரைசுத்து புதூருக்கு ஜெயக்குமார் உடல் கொண்டு செல்லப்பட்டது.

 

இந்நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்த கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமாரின் வயிற்றின் மேல் ஒரு இரும்பு தகடு இருந்ததாக பிரத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

 

மேலும் கால்கள் கட்டப்பட்டிருந்ததாக பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் உறுதி செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மர்மமான முறையில் உயிரிழந்த ஜெயக்குமாரின் மற்றொரு கடிதம் வெளிவந்துள்ளது. அதில், யார் யாருக்கு பணம் கொடுக்க வேண்டும் யாரிடம் எல்லாம் பணம் பெற வேண்டும் என்பது குறித்து அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon