ரூ.1,000 கொடுத்தால் ரூ.1 லட்சம் வட்டியில்லா கடன் கிடைக்கும் என மோசடி செய்த தம்பதி..!
திருப்பத்தூரில் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும் எனக்கூறி நூதன முறையில் மோசடி செய்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கூச்சங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் செல்வ மணிகண்டன் – சித்ராதேவி தம்பதி. இவர்கள் திருப்பத்தூர் அருகே உள்ள பகுதிக்கு சென்று அங்குள்ள மக்களிடம் பேசி உள்ளனர்.
தங்கள் தனியார் வங்கியில் இருந்து வருவதாகவும் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும் கூறி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி மேலாளர் விக்னேஷ் அடையாள அட்டையை வாங்கி சோதனை செய்த பொழுது அது போலியானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் வசூல் செய்த ஐம்பதாயிரம் ரூபாய் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





