தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்..!
தமிழகத்தின் ஒரிரு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பொதுமக்களை கோடை வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது.
வெப்ப அலை வீசுவதால் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகிறார்கள். இதற்கிடையே தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





