--- --:--:-- --

கிணற்றில் தாயுடன் நீச்சல் பழகிய குழந்தைகள்.. ஒரே வினாடியில் குடும்பத்தை இழந்த இளைஞர்..!

3

வேலூர் மாவட்டம் அணை கட்டு அடுத்த பிச்சநத்தம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு பவித்ரா என்ற மனைவியும் ரித்திக் என்ற மகனும், நித்திகா ஸ்ரீ என்ற மகளும் உண்டு. தற்பொழுது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் வீட்டில் இருந்துள்ளனர்.

 

பவித்ரா தினமும் தனது குழந்தைகளை அருகிலுள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்று நீச்சல் பழக வைப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். குழந்தைகளுடன் கிணற்றிற்கு சென்ற பவித்ரா நீண்ட நேரம் வீடு திரும்பவில்லை.

 

அதிர்ச்சி அடைந்த சுரேஷ் அக்கம் பக்கத்து வீடுகளில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சிறுமி நித்திகா ஸ்ரீ கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். தொடர்ந்து ஒடுக்கத்தூர் தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்ற சிறுமியின் உடலை மீட்டனர். பின்னர் பவித்ரா, ரித்திகா ஆகியோரின் சடலங்களும் மீட்கப்பட்டது பலியானோரின் உடல்களை பார்த்து சுரேஷ் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon