கண்ணில் மிளகாய் பொடி தூவி நகைகள் கொள்ளை..!
பல்லடம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி நகைகளை பறித்து சென்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
அருள்ஜோதி நகரில் வசித்து வரும் சரண்யா வீட்டில் தனியாக இருந்த பொழுது பட்டப் பகலில் வீடு புகுந்த இரண்டு பேர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி துணியால் கட்டிப்போட்டு மூன்று சவரன் நகையை பறித்து சென்றனர்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் விசாரணையில் சரண்யா வேலை பார்த்த கடையில் பணிபுரிந்து வந்த தாமரை கண்ணன் மற்றும் லோகராஜ் ஆகியோர் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





