--- --:--:-- --

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்கு பதிவு..!

5

ணிப்பூரின் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்கு பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

 

இரண்டாம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மணிப்பூர் உட்பட 13 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் கடந்த 26 ஆம் தேதி நடைபெற்றது. அப்பொழுது மணிப்பூரின் வாக்குச்சாவடியில் வன்முறை வெடித்தது. இதன் காரணமாக சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஆறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.

 

இதன் காரணமாக அந்த வாக்குச்சாவடிகளுக்கு இன்று மறுவாக்கு பதிவு நடத்தப்பட உள்ளது. பலத்த பாதுகாப்புடன் இன்று வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

 

காவல்துறையினருடன் துணை ராணுவ படையினரும் வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon