--- --:--:-- --

மதுரையில் பெண் கார்டு மீது தாக்குதல்.. சிறுவனிடம் விசாரணை..!

6

துரையில் பெண் கார்ட் தாக்கப்பட்டது தொடர்பாக 17 வயது சிறுவனிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கலில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் சிக்னலுக்காக மதுரை கூடல் நகரில் நின்று கொண்டிருந்தது.

 

அப்பொழுது ரயிலில் ஏறிய இருவர் பெண் கார்ட் ராக்கி என்பவர் வைத்திருந்த கைப்பையை பறித்துள்ளனர். அவர் தர மறுத்ததால் கத்தியால் தாக்கிவிட்டு பைக்கை பறித்து சென்றனர்.

 

இந்த சம்பவத்தில் செல்லூர் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவனை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கொள்ளையில் தொடர்புடைய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon