அடித்து நொறுக்கப்பட்ட விவிபேட் எந்திரம்.. கலவரமான வாக்குச்சாவடி மையம்..!
கர்நாடகாவில் கடந்த 26 ஆம் தேதி முதல் கட்டமாக மக்களவை தேர்தல் நடந்தது. அப்பொழுது சாம்ராஜ்நகர் தனித் தொகுதியின் அனுர்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராத அதிகாரிகளை கண்டித்து ஐந்து கிராம மக்கள் ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணித்தனர்.
அங்கு விரைந்து சென்ற தேர்தல் அதிகாரிகள் அந்த கிராமத்தினரை சமாதானம் செய்தனர். பின்பு அந்த பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஓட்டு சாவடிக்கு வந்த கிராமத்தினர் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் கட்டுப்பாட்டு எந்திரம், விவிபேட் எந்திரங்களை எழுப்பி கீழே போட்டு அடித்து நொறுக்கினார்.
மேலும் அங்கிருந்த மேஜையின் நாற்காலியையும் சூறையாடினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் மீண்டும் 146 வது வாக்குச்சாவடியில் இன்று மறு ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்திய 33 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





