கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு..!
டெல்லி முதலமைச்சரை சந்திக்ககெஜ்ரிவால் மனைவிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லி புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே அவர் இன்று சந்திக்க அனுமதி கோரி கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் விண்ணப்பம் வழங்கி இருந்தார். ஆனால் சந்திப்பதற்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.
பிரதமர் மோடியின் உத்தரவின் பேரிலேயே சந்திப்பு அனுமதியை சிறை நிர்வாகம் ரத்து செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. மோடி அரசு மனிதாபிமானம் பெற்று அனைத்து எல்லைகளையும் தாண்டி வருவதாக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் பயங்கரவாதி போல் நடத்துவதாகவும் ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
சிறையில் கணவரை சந்திக்க சுனிதா கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஏன் என்பதை நாட்டு மக்களுக்கு மோடி அரசு சொல்ல வேண்டும் எனவும் ஆம் ஆத்மி எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





