--- --:--:-- --

திருப்பி விடப்பட்ட அரசு பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதிய லாரி..!

7

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை பணிக்காக அரசு பேருந்து திசை திருப்பி விடப்பட்டதால் பெரும் விபத்து நிகழ்ந்ததில் இருவருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுங்குவார்சத்திரம் அருகே உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

 

அரசு பேருந்து திசை திருப்பி விடப்பட்டதை சற்றும் எதிர்பாராத கண்டெய்னர் லாரி ஒன்று அரசு பேருந்து மீது மோதியது. லாரியின் மீது பின்னால் வந்த ஆட்டோவும் மோதி விபத்திற்கு உள்ளான நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூரிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களால் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon