பொன் ராதாகிருஷ்ணனை ஆதரித்து அமித்ஷா பரப்புரை..!
திமுகவும், அதிமுகவும் ஊழல் செய்து கொண்டு தமிழகத்தின் வளர்ச்சியை தடுத்துக் கொண்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாவது நாளாக அமித்ஷாஞ் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இன்று கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் பிரவங்குடி இடைத்தேர்தலில் போட்டியிடும் நந்தினியையும் ஆதரித்து அமித்ஷா பரப்புரையில் ஈடுபட்டார். தக்கலை பேருந்து நிலையத்திலிருந்து வாகன பேரணியாக சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தார்.
அப்பொழுது பேசியவர் தமிழில் பேச முடியாதது வருத்தமாக இருப்பதாகவும் இன்னமும் மூன்று ஆண்டுகளில் இதே இடத்தில் தமிழில் பேசுவேன் எனவும் கூறினார். மேலும் சனாதன தர்மத்தையும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதையும் திமுகவினர்கள் சேர்த்து கோடிக்கணக்கான தமிழ் மக்களின் மனதை காயப்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





