--- --:--:-- --

ஒரு கணவருக்காக 2 மனைவிகள் காவல் நிலையம் முன்பு தாக்கிக் கொண்டதால் பரபரப்பு..!

9

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் ஆண் ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை விட்டு பிரிந்து இரண்டாவது வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்தது வருவதாக கூறப்படுகிறது.

 

கணவன் மீது முதல் மனைவி கொடுத்த புகாரில் விசாரணைக்கு போலீசார் அழைத்திருந்தனர். இதையடுத்து முதல் மனைவி மற்றும் அவரது தரப்பை சேர்ந்தவர்களும், இரண்டாவது மனைவியும் மற்றும் அவர்கள் தரப்பினை சேர்ந்தவர்களும் ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு முன் வந்த நின்ற பொழுது இரண்டு தரப்பை சேர்ந்தவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

 

இரண்டு தரப்பு பெண்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். பெண்கள் குடுமியை ஒருவருக்கொருவர் பிடித்துக் கொண்டு சண்டையிட்டு கொண்டனர்.

 

காவல் நிலையத்தில் இருந்து அருகே உள்ள பேருந்து நிலையம் வரை சாலையில் சண்டையிட்டுக் கொண்டனர். இதனால் அந்த இடம் பரபரப்பாக காட்சியளித்தது. இதனையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசார் மற்றும் பொதுமக்கள் அவர்களை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon