கண் அயர்ந்த ஓட்டுனர்..அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி..!
விருதுநகர் மாவட்ட ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை பிரதான சாலையாக பார்க்கப்படுகிறது. இந்த சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் சாலை பராமரிப்பு பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதனால் கோவையில் இருந்து ராஜபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பேருந்து தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தை கடக்க முயன்ற பொழுது ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து தலை குப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





