--- --:--:-- --

உண்டியல் பணத்தை திருட முயன்ற ஊழியர்..!

7

தெலுங்கானாவில் இரவில் கோயில் உண்டியல் பணத்தை திருட முயன்ற ஊழியர் உண்டியலுக்குள் கை மாட்டிக் கொண்டதால் கையும் களவுமாக சிக்கினார் காமிரெட்டி மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் கோயிலில் பணிபுரியும் சுரேஷ் என்ற ஊழியர் இரவில் கோயில் உண்டியல் பணத்தை திருட முயன்றுள்ளார்.

 

எதிர்பாராத விதமாக கை உண்டியலுக்குள் பூட்டிக்கொள்ளவே இரவு முழுவதும் உண்டியின் அருகிலேயே நின்றுள்ளார். கோயில் பூசாரி மற்றும் சக ஊழியர்கள் வந்து பார்த்த பொழுது சுரேஷ் உண்டியல் பணத்தை திருட முயன்றது தெரியவந்தது.

 

தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த போலீசார் கட்டர் மூலம் உண்டியலை மீட்டனர். மேலும் சுரேஷ் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon