மண்பானை செய்து கொடுத்து பரப்புரை செய்த பாமக வேட்பாளர்..!
மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் மண்பாண்டங்களை வடிவமைத்தபடி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். கும்பகோணத்தில் பரப்புரை மேற்கொண்டவர் திருமண மண்டபத்திற்கு சென்று புதுமண தம்பதி மற்றும் அவர்களது உறவினர்களிடம் நேரடியாக வாக்கு சேகரித்தார்.
தொடர்ந்து குயவர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற ம.க.ஸ்டாலின் அங்கு தன் கையால் மண்பானையை உருவாக்கி கொடுத்து குயவர் குடும்பத்தாரிடம் நூதன முறையில் வாக்கு சேகரித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





