விஜய்யுடன் Goat படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்த பிரபல நடிகர்..!
பிரம்மாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்ட வரும் திரைப்படம் Greatest Of All Time. வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இம்மாதம் Goat படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். மேலும் இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், Goat படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும், அதை நிராகரித்தது குறித்து பிரபல மலையாள நடிகரும், இயக்குனருமான வினீத் ஸ்ரீனிவாசன் பேசியுள்ளார். “Goat-ல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் வெங்கட் பிரபு அழைப்பு விடுத்தார்.
எனக்கு வெங்கட் பிரபு சார் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், அந்த நேரத்தில் நான் ஒரு படத்தை இயக்க தயாராக இருந்தேன். அதனால் Goat படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது” என கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




